போன வருடம் சிக்கன்குனியா வந்து அதை டாக்டர் வைரல் ஃபீவர் னு பேர் சொல்லி (சிக்கன்குனியா என்று சொல்லக் கூடாதாம்) டெக்லோஃபெனாக் குகளுக்கு கட்டுப்படாமல் அப்புறம் சித்த வைத்தியத்தில் ஆறு மாசம் லேஹ்யம் கசாயம்னு முழுங்கி ஒருவழியாய் வலி போச்சு. இப்போ ஏற்கனவே தோண்டிப் போட்டிருந்த எல்லா ரோடுகளும் (வெள்ளை கோடுகள்) உபயோகப் படாமல் நாலு ஸ்டேட் ரோடுகள் (மஞ்சள் கோடுகள்) மட்டும் உபயோகத்தில் இருந்தன. இப்போது அதிலும் ஒரு ரோட்டில் ஏதோ பாலம் கட்டுகிறேன் என ஒரு பெரிய குழியை ராட்சச பொக்லைனை வைத்து தோண்டிவிட்டார்கள். மக்கள் வேறு வழியில்லாமல் குண்டு குழி ரோடுகளில் இப்போது போய்க் கொண்டு இருக்கிறார்கள். எனக்கு சைடு எஃபெக்டாய் இடுப்பு வலி திரும்ப வந்து விட்டது. பில்லியன் ரைடெர் அம்மையாருக்கு பயத்தில் சைடு ஹாண்டிலை இறுகப் பிடித்துக் கொண்டே வருவதால் ஷோல்டர் பெயின். மறுபடியும் லேஹ்யம் கசாயம்தான் ஒரே வழி.
புதுக்கோட்டை நகரம் அதன் நீண்ட நேரான தெருக்களுக்காக மிகவும் புகழ் வாய்ந்தது ஆகும். தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் இந் நகரை உருவாக்குவதற்காக இதன் கவர்னராக இருந்த ஸ்ரீ சேஷய்யா சாஸ்த்திரிகள் அவர்கள் பாரீஸுக்கும் பாண்டிச்சேரிக்கும் சென்று ஆய்வு செய்து இந் நகரின்
திட்ட அமைப்பை உருவாக்கினார். ஆனால் இன்றோ இதன் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

No comments:
Post a Comment